வீதி விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்!!

51

பொலன்னறுவை புலஸ்திகம தம்பால 400 வீதியில் உள்ள எட்டு வீட்டு பகுதியின் (கெவல் அட்ட) வளைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இபோச பேருந்து தடம் மாறிச் சென்று எதிர் திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.