உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை : இலங்கையிலும் சட்டென சரிவு!!

415

இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் 5200 டொலர்களை தொட்டிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று 4720 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை இலங்கையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 388,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 357,000 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் சர்வதேச சந்தையில் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.