சட்டவிரோதமாக 55 லீட்டர் பெற்றோல் வைத்திருந்த இளைஞன் கைது!!

76

சட்டவிரோதமான முறையில் 55 லீட்டர் பெற்றோலைத் தனது வசம் வைத்திருந்த 39 வயதுடைய நபர் ஒருவர் புலத்கொஹுபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை நேற்று(20.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கேகாலை, பொஸ்ஸல்ல – தம்பேல்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் கேகாலை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் புலத்கொஹுபிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.