
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற விபத்தில் டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த தாயும் மகனுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், சுவிற்சர்லாந்திற்கு திரும்ப வானூர்தி நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.





