ஆட்டம்காணும் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : இலங்கையில் ஒரே நாளில் இரு தடவை உயர்வு!!

228

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.03.20026) ஒரே நாளில் இரண்டு தடவைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5000 ரூபாயால் அதிகரித்து 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு : உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (24.03.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை நிலவரம்

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 340400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.