அதிவேக வீதியில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து!!

40

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பிடித்து எறிந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று(27.03.2026) பிற்பகல் 01.55 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த தீ விபத்தில், பேருந்து முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.