வவுனியா தெற்கு பிரதேச சபையின் அடுத்த நான்காண்டு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்!!

587

எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தும் முகமாக கிராமிய தலைவர்களுக்கும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பிரதேசசபை தலைமைக் காரியலயத்தில் நேற்று சனிக்கிழமை இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 40 கிராம அலுவலர் பிரிவைச் சோந்த 182 கிராமங்களின் தலைவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட திட்டங்களை முன்னுரிமைப்படுத்தி ஒழுங்கமைக்கபட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் க.சிவலிங்கம் தெரிவிக்கையில்..

எமது பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்கண்டுள்ளோம். அதனை இன்று கிராம தலைவர்களிடம் தெரியப்படுத்தி எமக்கு கிடைக்கும் நிதியில் முன்னுரிமை அடிப்படையில் எவற்றை செய்வது என்பது தற்போது கலந்துரையாடி முடிவெடுத்துள்ளோம்.

இது தவிர, சுற்றுலா மையம், பூங்கா என்பனவும் அடுத்த வேலைத் திட்டங்களில் பொது வேலைத் திட்டமாக எம்மால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. கல்நாட்டியகுளம், கோமரசன்குளம், பம்பைமடு என்பன இதற்காக தெரிவு செய்யப்பட்டு ஆரம்ப வேலைகள் நடைபெறும் நிலையில் உள்ளன. இதனையும் மக்களுக்கு தெரியப்படுத்தி புதிய அபிவிருத்தி திட்டங்களுக்குள் இணைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

-நன்றி மலரும்-

11 12