8 வயது சிறுமியைக் காணவில்லை!!

885

Missing

நோட்டன் பிரிட்ஜ் – விதுலிபுர பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமி ஒருவரை நேற்றில் இருந்து (13.09) காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து சிறுமியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கவில்லை.

அதன்பின் தந்தை நேற்று நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ ஆகிய பொலிஸார் தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.