வர்த்தகப் பிரிவில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மாணவி!!

48

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் முதன்நிலை பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம்(31.03.2026) வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த அன்ரனிற்றா நிலுயினி அருள் ஜெனிபர் எனும் மாணவி வர்த்த பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர், தேசிய நிலையில் 312 வது இடத்தை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.