உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் வழக்கு!!

646

RAJNI

எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “மெயின் ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி படத்தில், அனுமதியின்றி எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர். மேலும் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

எனவே இப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தை வரும் 25ம் திகதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.