சென்னையில் மூன்று கண்களுடன் பிறந்த கன்று குட்டி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கொளத்துரை சேர்ந்த மேகலா என்பவர் மாடு வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த வந்த பசு ஒன்று ஈன்ற கன்று அதிசயமாக மூன்று கண்களுடன் பிறந்துள்ளது.
இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவவே, அங்குள்ள மக்கள் அனைவரும் விரைந்து வந்து கன்றுகுட்டியை பார்த்து செல்கின்றனர்.
மேலும் கன்றுகுட்டி நெற்றிக் கண் உள்ளிட்ட மூன்று கண்களுடன் உள்ளதால் அதனை கடவுள் சிவனின் அவதாரம் என்று கருதி மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நெற்றிகண்ணுடன் இந்த கன்றுகுட்டி பிறந்ததால் இதனை சீவன் என நினைக்கிறோம் என்றும் இந்த கன்றினை வழிபாட்டால் கிராம மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.






