வவுனியாவில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!!

884

வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் குறித்த துயரச்சம்பவம் நேற்று(18.04.2026) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

நேற்றயதினம் குறித்தநபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச்சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீர் என தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் அதனை செலுத்திச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.