மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

575

அனுராதபுரம் தலவ – எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதுடைய ஹெரத் முதியன்செலகே இந்திகா நமல் குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எப்பாவலையின் எலியதிவுல்வெவ பகுதியில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்த அவர், அந்த வீட்டிற்கு முன்னால் உள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மரக்கிளையில் தூக்கிட்டு உயிர் மாய்த்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை (19) கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா அல்லது வேறு சம்பவமா என்பது குறித்து எப்பாவல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.