
முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி நாட்டின் அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களையும் இந்த எச்சரிக்கை தொடர்பில் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் கடும் மின்னல் தாக்கத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.





