பெண் செயலாளருடனான தொடர்பு : கித்ருவான் விதானகேவுக்கு 1வருட போட்டித்தடை!!

449

Kithuruwan

இலங்கை வீரர் கித்ருவான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஒருவருட கால ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடையை இலங்கை கிரிக்கெட் சபை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் கித்ருவான் விதானகே இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3வது நாளின் இரவு முழுமையாக தங்குமிடத்தை விட்டு அனுமதி இன்றி வெளியே சென்ற குற்றம், நேற்று முன்தினம் நடைபெற்ற ஒழுக்காற்று குழுவின் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தண்டனையாக குறித்த போட்டியின் ஊதியம் முழுவதும் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, கடுமையாக அவர் எச்ச்சரிக்கப்பட்டு ஒருவருடகால ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடையை விதித்து இலங்கை கிரிக்கட் சபை உத்தரவிட்டுள்ளது.