இலங்கை வந்த வெளிநாட்டு இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் : உயிர் தப்பிய யுவதி!!

29

அஹங்கம கடலில் நீராடச்சென்ற 18 வயதுடைய இந்திய இளைஞன் ஒருவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வந்திருந்த நிலையில், அஹங்கம கடலில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போது, இளைஞனும் மற்றுமொரு யுவதியும் கடலில் இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் அஹங்கம கொன்னகாஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.