79 வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர்!!

163

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 79 வயதான திலக மாலனி ஜெயரத்ன என்ற மூதாட்டி 18ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தாயை பாலியல் சீண்டல் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காதை வெட்டி, இரண்டு தங்கக் காதணிகளும் திருடப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 67 வயதான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் காதை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தியும், அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகளும், கிரிந்திவெலயில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.