
வவுனியா வடக்கு பிரதேச சபையின் புதிய செயலாளராக தேவராசா கார்த்திகன் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இப்பிரதேசத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதில் புதிய செயலாளர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பை அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள செயலாளருக்கு தவிசாளர், சபை உறுப்பினர்கள், பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




