தர்பூசணியால் உயிரிழக்கவில்லை : நான்கு பேர் மரணத்தில் திடீர் திருப்பம்!!

22

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவின் மும்பையில் நான்கு பேர் உயிரிழந்ததற்கு தர்பூசணி காரணம் அல்ல என தெரிய வந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததற்கு தர்பூசணி காரணம் சென்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது கோடைகாலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் தர்பூசணி தொடர்பாக பாரிய விவாதங்களை தூண்டியது. இந்த நிலையில், உடற்கூராய்வின் முடிவு வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மார்ஃபின் என்ற வலி நிவாரணி அதிக அளவில் இருந்ததாகவும், உயிரிழந்தவர்களின் மூளை உள்ளிட்ட பாகங்கள் பச்சை நிறமாக மாறி இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தர்பூசணிக்கும் உயிரிழப்பிற்கும் தொடர்பு இல்லை என மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், இறுதி அறிக்கைகாக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உயிரிழந்த குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தங்கள் கருத்தை வெளியிடவில்லை, மேலும் நான்கு பேரின் உடல்களின் உள்ளுறுப்புகள் இரசாயனப் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.