பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து : 13 பேர் வைத்தியசாலையில்!!

104

நாவலப்பிட்டி – கெடபுலாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (05.05.2026) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாவலப்பிட்டி – கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில், 11மாணவிகளும் இரண்டு மாணவர்களும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் என நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.