இலங்கை ரூபாவுக்கு எதிராக 325 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலரின் பெறுமதி!!

22

அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 325 ரூபாவை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று முன்தினம் 324.87 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று 325.53 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேபோல், முன்தினம் 317.26 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையும், நேற்று 317.86 ரூபாயாக அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக, ரூபாயின் விற்பனை விலை நேற்று 325 ரூபாய் என்ற பெறுமதியை தாண்டியுள்ளது.

இதேவேளை 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக 2.9 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.