சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

3

மொனராகல, சிரிபுரகம பகுதியில் கடந்த 3ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

விபத்தின் போது சகோதரி உயிரிழந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி சகோதரன் உயிரிழந்துள்ளார். சிரிபுரகம பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சாமிக தேஷான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்கு காத்திருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி, சாமிக தேஷான் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த அன்றைய தினமே, மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 9ஆம் தரத்தில் கல்வி பயின்ற சந்தலி என்ற சிறுமி உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த சிறுவன் விபத்தில் பலியான சிறுமியின் பெரியப்பாவின் மகன் என தெரியவந்துள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுடன் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.