பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்!!

5

காலி பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (13.05.2026) பலத்த மழை நிலவிய நிலையில், குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த இளைஞர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.