இன்று காலை இடம்பெற்ற விபரீதம் : 25 வயதான மகளும் தந்தையும் பலி!!

169

மாத்தளை – வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். இன்று காலை (15) இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் இருவரையும் வில்கமுவ பிராந்திய மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தில் 56 வயதான யு. ஜி. ஆனந்த சமரவிக்ரம என்ற தந்தையும் அவரது 25 வயதான மகள் தனுஜா சமரவிக்ரமவும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.