யாழ் ரயில் சேவை வெள்ளோட்டம் : அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!

1127

இன்று 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பரீட்சார்த்த அதிவேக ரயில் சேவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பளைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடுகதி புகையிரத பரிட்சார்த்த நடவடிக்கைகள் இன்று, நாளை, நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதால் புகையிரதப் பாதையின் அருகில் பயணிப்பவர்கள், கடவையை கடப்பவர்கள் மிக அவதானத்துடன் செயற்ப்படுமாறும் கால்நடைகளின் நடமாட்டத்தை புகையிரதப் பதையருகில் கட்டுப்படுத்தும்படியும் ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன் துண்டுப்பிரசுங்களும் யாழ் நகரில் வழங்கப்படுகிறது.

இருப்பினும் நாவற்குழி பகுதியில் 150 மீற்றர் நீளத்திற்கு கடலை ஊடறுத்து செல்லும் பாலம் அமைகும் பணிகள் பூர்த்தியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 2 3