மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை கைது செய்யும் போது மரணம்!!

54

குருணாகல், பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படிவெல பகுதியில் கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு முற்றியதில், அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 61 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை இந்தத் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 வயதான கணவனை பிங்கிரிய பொலிஸார் கைது செய்தனர்.

எனினும், கைது செய்யப்படும் போது சந்தேக நபருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.