இரண்டே நாட்களில் 10 ஆயிரம் வரை உயர்ந்த தங்கத்தின் விலை!!

100

இலங்கையில் இன்றைய தினம் (15.06.2026) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தகவல்களின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்க பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48,070 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,070 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் கடந்த இரண்டு தினங்களை விட இன்று 6000 ரூபா அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.