
தற்போதெல்லாம் ஓடியோ வெளியீட்டு விழாக்களில் டி.ஆர் தவறாமல் ஆஜர் ஆகிவிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் கல்கண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வழக்கம் போல் அவரது ஸ்டையிலேயே பொறி தெறிக்க பேசினார்.
அதில் நான் ஒரு காமெடி நடிகரை அறிமுகம் செய்தேன், அவரின் சம்பளம் அப்போது 1500 தான், ஆனால் தற்போது கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.
காமெடி நடிகர்கள் என்றால் அவரால் மக்களும் சிரிக்க வேண்டும், தயாரிப்பாளரும் சிரிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது இரண்டுமே நடப்பது இல்லை என கூறி சந்தானத்தை மறைமுகமாக தாக்கினார்.





