
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நேற்று (19.06) இடம்பெற்ற வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த குறித்த இளைஞர், பயிற்சி நிறைவடைந்த பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த சனுயன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர் மீது, எதிர்திசையில் வேகமாக பயணித்த மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மீன் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




