விடிந்தால் திருமணம் மணமகள் குடும்பத்தோடு எடுத்த விபரீத முடிவு!!

17

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணத்திற்கு இன்னும் ஒரே ஒரு நாளே இருந்த நிலையில், மணப்பெண் தனது பெற்றோருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் ஒருவர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் மற்றும் தொல்லைகளே இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மைசூரு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா, இவரது மனைவி நாகரத்னா மற்றும் இவர்களது மகள் ரக்ஷிதா (21). ரக்ஷிதாவிற்குப் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, நாளை மறுநாள் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த உல்லாஸ் கௌடா என்ற வாலிபர், ரக்ஷிதாவைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ச்சியாக வற்புறுத்தி, அச்சுறுத்தி வந்துள்ளார்.

ரக்ஷிதாவின் திருமணம் வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனதை அறிந்த உல்லாஸ் கௌடா, ரக்ஷிதாவைப் பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பியதுடன், மணமகனின் குடும்பத்தாருக்கு ரக்ஷிதாவின் புகைப்படங்களை அனுப்பித் திருமணத்தை நிறுத்த சதி செய்துள்ளார்.

திருமணம் தங்கிவிடுமோ என்ற அச்சமும், சமூகத்தில் ஏற்பட்ட கடுமையான அவமானமும் ரக்ஷிதாவின் குடும்பத்தாரைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் வேதனையடைந்த ரக்ஷிதா, அவரது தந்தை சிவண்ணா மற்றும் தாய் நாகரத்னா ஆகிய மூன்று பேரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி. நரசிபுரா காவல் நிலைய போலீசார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்பதற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்குத் தூண்டிய வாலிபர் உல்லாஸ் கௌடாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருமணக் கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய வீடு, ஒரே நாளில் சுடுகாடாக மாறிய சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் உலுக்கியுள்ளது.