நடிகர் கொலையில் புதிய திருப்பம்!!

630

Act

திருநெல்வேலி மாவட்டத்தில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியின் கார் சிக்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடியை சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ (36). மெக்கானிக்கல் பொறியியலாலரான இவர் சென்னை சென்று ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

பின்னர் சினிமா தொழிலில் ஈடுபட்ட இவருக்கு, பெங்களூரைச் சேர்ந்த சினிமா துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மதுரவாயல் எஸ்ஆர்எஸ் நகரில் வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்தனர்.

ரொனால்டுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், ஸ்ருதிக்கும், ரொனா ல்டுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், ரொனால்டின் அண்ணன் ஜஸ்டின் பிரின்சோ பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஜனவரி 1ம் திகதி தனது சகோதரரை காணவில்லை என்று புகார் அளித்தார்.

ஏப்ரல் 12ம் திகதி ஸ்ருதி சந்திரலேகாவும் ரொனால்டுவை காணவில்லை என்று சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பொலிசாரின் தீவிர விசாரணையில் ஸ்ருதி, மற்றும் ரெனால்டு பிரின்சோ வின் நண்பர் உமாசந்திரன் இருவரும் கூலிப்படை வைத்து ரொனால்டை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ், ரபீக் உஸ்மான் கனி, ஜான் பிரின்சன் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்ருதி சந்திரலேகா கடந்த 4ம் திகதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நெல்லை முன்னீர்பள்ளம் அருகேயுள்ள ஆரைகுளத்தில் நம்பர் பிளேட் இல்லாத மர்ம கார் ஒன்று கடந்த 3 தினங்களாக கேட்பாரற்று நிற்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் அங்கு சென்று பார்த்ததில், இந்த கார் துணை நடிகர் ரெனால்டு பிரின்சோ கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.