வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை!!

696

2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பழுதூக்கல் (Weight Lifting) போட்டியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 87 கிலோகிராம் (87kg Category – Under 20 Girls) எடைப் பிரிவில் போட்டியிட்ட ஏ. கவிஜெலிலினி (A. Kavijeliliny) என்ற மாணவியே, தனது திறமைகளை வெளிப்படுத்தி முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி ஏ. கவிஜெலிலினிக்கும், அவருக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பாடசாலை சமூகமும் விளையாட்டு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.