சர்வதேச சந்தையில் அதிரடியாக குறைந்த தங்கம் , வெள்ளி விலைகள் : மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

112

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலை 4,083.88 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது. அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 60.96 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் குறைந்து 380,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், உள்ளூர் தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.