
வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மன்னார் வீதியில் உள்ள 4ஆம் கட்டைப் பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா வாரிக்குட்டியூர் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கலைச்செல்வன் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தையடுத்து தனியார் பேரூந்து சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் பேருந்து வவுனியா பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





