
கொழும்பு – கொலன்னாவ பகுதியில் 624 வீடமைப்பு அலகுகளை கொண்ட 12 மாடி வீடமைப்பு வளாகத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன், 5,784 மில்லியன் ரூபா செலவில் இந்த வீடமைப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த பகுதிக்கு விஜயம் செய்து பணிகளை பார்வையிட்டுள்ளார்.




