கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த கொடூரம்!!

20

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், ஒரு கர்ப்பிணிப்பெண்ணை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில், அமித் குப்தா (26) என்னும் நபர் தன் மனைவியான நேஹா குமாரியுடன் (23) வாழ்ந்துவந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, தான் வேலைக்குச் செல்லும்போது, நேஹாவை வீட்டுக்குள் வைத்து,கதவை வெளியே பூட்டி விட்டுச் செல்லத் துவங்கியுள்ளார் குப்தா.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு, தன் மாமாவை மொபைலில் அழைத்த குப்தா, தான் தன் மனைவியைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவர் குப்தா வீட்டுக்கு விரைய, அங்கு நேஹா உயிரிழந்து கிடந்திருக்கிறார். வாளி ஒன்றிலிருந்த தண்ணீரில் நேஹாவின் முகத்தை அமிழ்த்திக் கொலை செய்துள்ளார் குப்தா.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, நேஹாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ள அவர்கள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். குப்தா தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

இதற்கிடையில், தன் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக குப்தாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதே இந்த பயங்கர முடிவுக்குக் காரணம் என கருதப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.