இலங்கையில் மீண்டும் நான்கு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

89

தங்கத்தின் விலை இன்றைய தினம் (03.07.2026) 4000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (02.07.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.