கணவனை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி : காதலனை வரவைத்து செய்த கொடூரம்!!

24

ஆந்திர மாநிலம் சித்தூரில் கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 23 வயது ரமேஷ் என்பவருக்கும், 19 வயது ஹாசினி என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இதற்கிடையில் ஹாசினிக்கு அவரது நண்பரான யுகந்தருடன்(20) தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து ரமேஷை கொல்லவும் திட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அம்மாவாசை நாளான செவ்வாய்க்கிழமை அன்று கணவன் ரமேஷை மல்லப்பா கொண்டையில் உள்ள ஶ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு மனைவி ஹாசினி வற்புறுத்தியுள்ளார்.

ரமேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்து கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய வழியில் மனைவி ஹாசினி தன்னுடைய கையில் இருந்த கைப்பையை கீழே போட்டுள்ளார்.

அதை எடுப்பதற்காக ரமேஷ் பைக்கை நிறுத்திய போது புதருக்குள் மறைந்திருந்த காதலன் யுகந்தர் ரமேஷை சுற்றி வளைத்து காட்டுப் பகுதிக்குள் வைத்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

ரமேஷ், ஹாசினி மற்றும் அவர்களது குழந்தை யாரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாயார் பொலிஸாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஹாசினியும் ரமேஷும் கோவிலுக்கு வந்ததும், பின்னர் ஹாசினி அதே இருசக்கர வாகனத்தில் ஹாசினி வேறு இரண்டு ஆண்களுடன் செல்வதும் பதிவாகியிருந்தது.

மேலும், ஹாசினியின் செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிட தரவுகளை ஆய்வு செய்து கொலை நடந்த இடத்தையும் ரமேஷின் உடலையும் கண்டுபிடித்தனர். தற்போது கொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 4 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே சமயம் ஹாசினிக்கு திருமணம் நடைபெற்ற போது அவர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துக் கொண்டிருந்ததாகவும், அவர் மைனராக இருந்த போது திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.