வவுனியாவில் 60 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிய வவுனியா சிற்றி ரொட்டரி கழகம்!!

247

வவுனியாவில் மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கில் வவுனியா சிற்றி ரொட்டரி கழகத்தால் (Rotary Club of Vavuniya City) பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ரேனகம் (Renaham) தனியார் மண்டபத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (17.07.2026)வழங்கப்பட்டது.

ரொட்டரி சர்வதேச மாவட்டம் 2982, ரொட்டரி சர்வதேச மாவட்டம் 3220 மற்றும் வவுனியா சிற்றி ரொட்டரி கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “Hope on Wheels 2.0” என்ற பெயரில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் ரோட்டரி சர்வதேச மாவட்ட 3220 ஆளுநர் Rtn. குமார் சுந்தரராஜ், மாவட்ட 2982 ஆளுநர் Rtn.C.செந்தில்குமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn. S.லோகநாதன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn. ரொபின்சன் B.பிரசாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் வவுனியா பிரதேச செயலாளர் இந்திரராசா பிரதாபன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் T.முகுந்தன் மற்றும் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வி.தட்ஷாயினி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த திட்டத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் 60 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. வவுனியாவில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் வவுனியா சிற்றி ரொட்டரி கழகத்தின்(Rotary Club of Vavuniya City ) முக்கிய நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.