100 கோடி கொடுத்தாலும் வேண்டாம் : சமூகவலைத்தளங்களை வெறுக்கும் பிரபல நடிகை!!

106

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார். 100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் என அவர் கூறியுள்ளமை ரசிகர்களுக்கு மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“என்னுடைய நிழற்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது. யாராவது தனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகியது எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்துள்ளது” எனவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.