க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு!!

154

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

அதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.