திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை : சுருதிஹாசன்!!

654

Sruthi hasan

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை விட்டு தோழி வீட்டில் தங்கினார்.