இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி!!

114

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (24) அதன் விலை 3000 ரூபா குறைந்து 374 ,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2800 ரூபா குறைந்து 344,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.46,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.