800 ரூபா கேட்டு 103 வயது பாட்டியை தலையில் பொல்லால் அடித்துக் கொன்ற 13 வயதுச் சிறுவன்!!

853

police

பலாங்கொட – ஏகொட – வலேகொட பிரதேச வீடொன்றில் நுழைந்த சிறுவன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த வீட்டில் இருந்த நூறு வயதைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உறவினர் எனக் கருதப்படும் குறித்த சிறுவன் வீட்டுக்குள் நுழைந்து வயோதிபப் பெண்ணிடம் 800 ரூபா பணம் கேட்டு அவரை பொல்லால் தலையில் தாக்கியுள்ளார்.

மூன்று தடவைகள் தலையில் பொல்லால் தாக்கப்பட்ட 103 வயது பாட்டி பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

8ம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு பாட்டியை பணம் கேட்டு தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துரதிஸ்டவசமான சம்பவம் நேற்று (24.09) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பலாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.