கொழும்பில் இடம்பெற்ற கோரம் : தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலி : தவிக்கும் பெற்றோர்!!

106

கொழும்பு, இராஜகிரிய பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பெற்றோருடன் சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி அதிகாலை சம்பவித்த விபத்தில் நிசித்து ஹுமெத் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உறவினர் வீடொன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து சம்பவித்துள்ளது.

வீதியில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வீட்டின் இடது பக்கமாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது சாரதியான தந்தையும் பின் ஆசனத்தில் இருந்த தாயும் வீட்டின் இடது பக்கத்தில் விழுந்துள்ளனர்.

இந்நிலையில், சாரதி ஆசனத்திற்கு முன்னால் பயணம் செய்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு, எதிரே வந்த காரின் முன்பக்க வலது சக்கரத்தடியில் சிக்கியுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சில நிமிடங்களுக்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக சிறுவனின் பெற்றோருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய காரின் சாரதியான கொட்டிகாவத்தை, மகா புத்துமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.