மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் : சகோதரன் பலி!!

24

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மகியங்கனை – பதியதலாவ வீதியில் தம்பான 54ஆம் மைல்கல் பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணம் செய்த இளைஞரும் உயிரிழந்துள்ளதாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான 31 வயதுடைய திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும், அவரது மனைவியின் தம்பியான 23 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மரணங்கள் தொடர்பிலான மரண விசாரணைகள், மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். பல்கலைக்கழகத்தில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் சென்ற நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.