வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி : ஒருவர் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்!!

190

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாரதி மற்றும் இரு சிறுவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.