கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி : மக்களின் கொந்தளிப்பால் வன்முறை!!

258

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன்,

வாகனம் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சம்பவித்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

போட்டிப் போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வாகனம் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வாகனத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளும் நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

வாகனத்தின் தீயை கட்டுப்படுத்தியதுடன், வன்முறை கட்டுப்படுத்தவும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.