இந்துக்களின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இவ் விழாவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் நடன நிகழ்வும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, கண்டி சத்தியசாயி கலாலாயம் மாணவர்களினதும் நடன நிகழ்வுகளும் வெகு சிறப்புற இடம்பெற்றது.
இவ் விழாவில் பாராளுமன்ற பிரதிசபாநாயகர் சந்திமவீரக்கொடி, அமைச்சர்களான தினேஸ்குணவர்த்தன, வாசுதேவநாணயக்கார, திஸ்ஸவிதாரன, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, அஸ்வர், ரவிகருணாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற பிரதிசெயலாளார் நாயகம் மற்றும் பாராளுமன்ற அலுவலர்கள் இந்து கலாச்சார திணைக்கள அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






