திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதி பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்ற வேளை பஸ் இவ்வாறு பஸ் பள்ளத்தை நோக்கி நகர்ந்தவேளை அதில் மோதுண்ட ஒருவர் பாதுகாப்பு கொங்றீட் தூணில் நசுங்குண்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளார்.
பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் சென்ற சீதுவ – ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து ஆலயத்தில் கூடியிருந்தவர்கள் பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளனர். காயமடைந்த சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.